வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips!
முகமூடி திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.
முகமூடி திரைப்படம் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைபடத்தில் நடித்து தமிழில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தெலுங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மொழி போதம் இன்றி பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதியின் இறுதி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.
இவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் இருந்து, இப்போது வரை மெல்லிய உடல் அமைப்புடன் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பை தக்கவைத்து வருகின்றார். அவர் வெயிட் ஏறாமல் பார்த்துக்கொள்வதற்காக என்ன செய்கின்றார் என்பது குறித்து அவரே பகிர்ந்துள்ள சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூஜா ஹெக்டே கூறும் Weight Loss Tips
வெயிட் ஏறாமல் பார்த்துக்னொள்ள பூஜா ஹெக்டே தினமும் காலையில் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பாராம். அதன் பின்பாக, புரதம் நிறைந்த காலை உணவை எடுத்துக்கொள்வாராம். இவரது உணவில் முட்டையின் வெள்ளைக்கரு, அவகேடோ டோஸ்ட் அல்லது ஸ்மூதீஸ் ஆகியவை பொரும்பாலும் இருக்குமாம்.
அதனை தொடர்ந்ர்து காலை 11.00 மணியளவில் சில ஹெல்தி ஸ்னாக்ஸையும் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். அதற்காக அவர் ஒரு கைப்பிடி பாதாமை சாப்பிடுவாராம், இது இல்லவவிட்டால், வால்நட்ஸ் எடுத்துக்கொள்வார். அல்லது ஒரு கிண்ணம் நிறைய இருக்கும் ஃப்ரெஷ்ஷான பழங்களை ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வாராம்.
மதிய உணவாக பூஜா, மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வாராம் குறிப்பாக கிரில் செய்த சிக்கன் அப்படியில்லை என்றால் மீன், பிரவுன் அரிசி, குயினோவா, ஃபைபர் அதிகம் நிறைந்த காய்கறிகள் மதிய உணவில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வாராம்.
மாலையில் பூஜாவுக்கு சில ஹெல்தி ஸ்னாக்ஸை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கின்றாம். சூப், டோஃபு, பனீர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுவாராம்.
அதுமட்டுமன்றி முக்கியமாக உடல் எடையை சரியாக மெயிண்டெயின் செய்ய,இவர், தண்ணீர் அதிகமாக குடிப்பதோடு கிரீன் டீ, பழச்சாறு, டீடாக்ஸ் பானங்கள் ஆகியவற்றை அதிகமாக குடிப்பாரம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |