வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இறால் 65- குறைந்த செலவில் அதே டேஸ்ட்
பொதுவாக அசைவ உணவு என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
கடல் வாழ் உயிரினமான இறாலை வைத்து இறால் தொக்கு, இறால் பிரியாணி, இறால்-65 போன்ற பல்வேறு உணவுகளை செய்யலாம். அவை நமது வீட்டு சுவையில் இருப்பதை பலரும் ரெஸ்டாரண்ட் சுவையில் செய்து கொடுத்தால், இதுவரை சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படியாயின், மொறுமொறுப்பான இறால் 65 ஹோட்டலில் செய்வது போன்று வீட்டிலேயே செய்யலாம். அதற்கு அதிகமான நேரம் போகாது, மாறாக ரெசிபி தெரிந்திருப்பது அவசியம்.
இப்படி செய்யும் பொழுது இறால் சாப்பிடாதவர்கள் கூட இனி விரும்பி சாப்பிடுவார்கள். ஞாயிற்றுகிழமைகளில் சூடான சாதத்துடன் செய்து அசத்துங்கள்.

அந்த வகையில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இறால் 65 எப்படி வீட்டிலேயே இலகுவாக செய்யலாம் என்பதை தொடர்ந்து பதிவில் விளக்கமாக பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுத்தம் செய்யப்பட்ட இறால் - 250 கிராம்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
- சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 1தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
- சோள மாவு - 1 தேக்கரண்டி
- அரிசி மாவு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- எலுமிச்சை சாறு - அரைவாசி
இலகுவான செய்முறை
முதலில் உங்களுக்கு தேவையான அளவு இறாலை எடுத்து நன்றாக மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, உங்கள் வீட்டிலுள்ள மசாலாக்கள் அனைத்தையும் ஒரு அளவில் சேர்த்து கொஞ்சமாக கோதுமை மா அல்லது சோளம் மா போட்டு கலந்து கொள்ளவும்.

மசாலா சேர்க்கப்பட்ட இறாலை சுமாராக 10- 15 நிமிடம் ஊற வைக்கவும். அப்போது தான் இறாலில் மசாலா இறங்கி பொறிக்கும் பொழுது நல்ல வாசணை வரும்.
அடுத்து, ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் இறாலை ஒவ்வொன்றாக போட்டு பொறித்தெடுக்கவும்.
இறுதியாக பொறித்த இறாலின் மீது கொஞ்சமாக கறிவேப்பிலையை பொறித்து போட்டு, பாதி எலுமிச்சைப்பழத்தை பரவலாக ஊற்றினால் சுவையானரெஸ்டாரண்ட் ஸ்டைல் இறால் 65 தயார்!

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |