கண்கலங்கிய படி பிரபல நடிகரை திருமணம் செய்த நடிகை ரேஷ்மா: ஆனந்த கண்ணீரில் ஷோபனா
சின்னத்திரை நட்சத்திரங்களான ரேஷ்மா மற்றும் மதன் ஜோடிகள் காதலர்களாக இருந்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பிரபல ரிவியில் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. இவரும், தனது அக்காவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மதனுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ‘அபி டெய்லர்’ ௭ன்னும் சீரியலில் மதன் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து கலக்கி வரும் நிலையில் ரீல் ஜோடிகள், தற்போது ரியல் ஜோடிகளாக திருமணத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
மேலும் ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்தில் திரை பிரபலங்களும் சீரியல் நடிகைகளும் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கழுத்தில் தாலியை வாங்கியவுடன் ரேஷ்மா கண்ணீர் சிந்தினார். மேலும் இவருக்கு பின்னே நின்ற செம்பருத்தி சீரியல் ஷோபனாவும் கண்கலங்கி அழுதுள்ளார்.
