கிட்ட போனாலே மோப்ப சக்தியால் கொரோனாவை கண்டறியும் நாய்! ஆராய்ச்சியாளர் தகவல்
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தடுக்கும் வகையில், முககவசம் அணிவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அரசு வலியுறுத்து வருகிறது.
இதனிடையே, லண்டன் ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனா டெஸ்ட் எடுக்காமலே கொரோனா வைரஸ் தொற்றை நாய்களின் மோப்பசக்தி மூலம் கண்டுபிடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதில், லண்டனில் ஜேம்ஸ் லோகன் என்ற ஆராய்ச்சியாளர், மனித உடலில் இருந்து வரும் வாசனை மூலம், அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன என்பது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த ஆராய்ச்சிக்காக, மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர் எனக் கூறியுள்ளார்.