40 வருஷமா அந்த நடிகர் கூட நடிக்கணும் ஆசை... ஆனா முடியல – புலம்பிய பிரபல நடிகை!
40 வருஷமா எனக்கு அந்த நடிகர் கூட நடிக்கணும் ஆசை. ஆனா அது நடக்கவே இல்லை என்று பிரபல நடிகை ரேணுகா தெரிவித்துள்ளார்.
நடிகை ரேணுகா
40 வருடமாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை ரேணுகா. இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாத்துறையில் நிறைய படங்கள் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார்.
அவர் கூட நடிக்கணும் ஆசை
சமீபத்தில் நடிகை ரேணுகா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் ஆரம்பக்காலத்தில் நாடகங்களில் முதலில் நடிக்கத் தொடங்கினேன்.
அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. சினிமா பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. இயக்குனர் பாலச்சந்தரும், டி.ராஜேந்திரும்தான் எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார்கள்.
நான் கமல், சூர்யா உட்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால், இதுவரைக்கும் நடிகர் ரஜினிகாந்தோடு நான் நடித்ததே இல்லை. இது எனக்கு பெரிய மனக்குறையாகவே இருக்கிறது. நான் நாடகங்களில் நடிக்கும்போது அதை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார்.
அற்புதமாக நடித்துள்ளீர்கள் என்று என்னை பாராட்டினார். அப்போதில் இருந்தே எனக்கு நடிகர் ரஜினியோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால், 40 வருடங்களாகியும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. அது எனக்கு வருத்தமாகவே உள்ளது.
அதே போல விஜய், அஜித் கூடவும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ரஜினியோடு ஒரே ஒருமுறையாவது நடித்து விட வேண்டும். அதுதான் என் ஆசை. எனக்கு அந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறேன் என்றார்.