Renerve Plus மாத்திரைகள் எதற்காக பயன்படுகிறது?
Multi Vitamin மற்றும் Minerals Supplement ஆக Renerve Plus மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
புற நரம்பியல் மற்றும் நரம்புகளில் ஏற்படும் சேதங்களை சரிசெய்கிறது, நீரிழிவு நோய் மற்றும் மது பழக்கத்தால் சேதமடையும் நரம்புகளை சீர்படுத்தவும், உடலில் homocysteine அளவை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதிலுள்ள குரோமியம் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தவும், குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் HBA1C அளவை சீர்செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இருக்கும் போலிக் அமிலம் அமினோ அமில வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
முக்கிய குறிப்புகள்
உணவுக்கு பின்னர் தினமும் ஒரு மாத்திரை என்ற அளவில் இதனை உட்கொள்ளலாம்.
மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் மட்டும் உட்கொள்ளவும், நீங்களாக அதிகரிக்கவோ, குறைக்கவோ வேண்டாம்.
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இதில் உள்ள மூலப்பொருட்களில் உங்களுக்கு ஏதும் ஒவ்வாமை இருந்தாலும் மருத்துவரிடம் கண்டிப்பான முறையில் தெரியப்படுத்தவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
குறிப்பு- எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.