ஆடையில் படிந்த மாதவிடாய் கறையை எப்படி அகற்றுவது? சூப்பரான டிப்ஸ் இதோ
ஆடையில் மாதவிடாய் கறைகள் ஏற்பட்டால் அதனை எளிதில் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாதவிடாய் கறைகளை எளிதில் எவ்வாறு நீக்குவது?
பெண்களுக்கு மாதவிடாய் என்பது பல தொந்தரவுகளை கொடுக்கின்றது. வயிறு வலி, இடுப்பு வலி, கால் பிடிப்பு, குமட்டல் என்று பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இவ்வாறு நேரங்களில் வேறு எந்த விடயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதிலும் அணிந்திருக்கும் ஆடைகளில் கறை ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் தொற்றிக் கொள்கின்றது.
அவ்வாறு ரத்தக்கறைகள் படிந்துவிட்டால், அதனை எவ்வாறு எளிதில் சுத்தம் செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியவதில்லை.
மேலும், இரத்தக் கறை பட்ட துணியை உடனே தண்ணீரில் ஊறவைத்தால் எளிதில் அகற்றலாம். ஆனால் நன்கு உலர்ந்த இரத்தக் கறைகள் எளிதில் நீங்காது. ஆனால், சில எளிய குறிப்புகள் மூலம் இவற்றையும் எளிதாக நீக்கலாம். இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
வெறும் உப்பு, துணி துவைக்கும் சோப்பு, வெதுவெதுப்பான நீர் இவற்றினை கொண்டு கறையை நீக்கலாம். முதலில் கறை படிந்த ஆடையை தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்பு உப்பை பயன்படுத்தி தேய்த்து, அதனைத் தொடர்ந்து துணி சோப்பு பயன்படுத்தி துவைக்கவும். கடைசியாக வெதுவெதுப்பான நீரில் கழுவி காய வைத்து எடுத்தால் கறை இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |