காய்கறிகளில் இருக்கும் புழுக்களை விரட்ட ஒரு டிப்ஸ் இதோ!
பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகளை வெளியில் பார்க்கும் பொழுது பச்சையாக புத்துணர்வாக இருக்கும்.
ஆனால் உள்ளே ஏகப்பட்ட புழுக்கள் மற்றும் பக்ரீயாக்கள் வாழுகின்றன.
புழுக்கள் உள்ளிருக்கின்றது என தெரியாமல் சமைக்கும் பொழுது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
அந்த வகையில், முட்டைக்கோசு, காலிஃப்ளவர், பாலக்கீரை, பட்டாணி, பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய் போன்ற பச்சை கீரைகள் ஆகியற்றில் புழுக்கள் காணப்படும்.
இது போன்ற காய்கறிகளில் இருக்கும் புழுக்களை ஒரு நுட்பம் கொண்டு அகற்றலாம், இது குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
புழுக்களை விரட்ட ஈஸி டிப்ஸ்
1. காலிஃப்ளவரில் உள்ள புழுக்கள்
காய்கறிகளில் அதிகமான புழுக்களை கொண்டிருப்பது காலிஃபிளவர் தான். இதனை நீக்குவது என்பது மிக முக்கியம்.
இதன்படி, காலிஃப்ளவரின் ஒவ்வொரு தண்டிலும், பூவிலும் மறைந்து இருக்கின்ற புழுக்களை பார்த்து நீக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்து, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்ட காலிஃப்ளவரை அதில் போடவும். இவ்வாறு செய்யும் பொழுது புழுக்கள் மேல் நோக்கி வரும்.
2. கீரைகளை சுத்தம் செய்வது எப்படி?
பாலக்கீரை, தண்டிக்கீரை, அரைக்கீரை போன்ற கீரைகள் அதிக சத்து வாய்ந்தவை. பச்சை நிறத்தில் இருப்பதால், கீரைகளில் இருக்கும் புழுக்களை இனங்காண முடியாது.
ஆகையால் கீரைகளை சமைப்பதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் உப்பு தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. முட்டைக்கோசு
முட்டைக்கோசை நறுக்கி வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் மஞ்சள் கலந்த நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் ஊற வைக்கவும். பின்னர் அலசினால் ஏகபட்ட புழுக்கள் காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |