தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா?... சீரகத்தை இப்படி சாப்பிடுங்க
வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பதற்கு சீரகத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பலரும் குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி, டயட், மாத்திரை மருந்துகள் என எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சீரகம் இதற்கு சிறந்த தேர்வாக இருக்கின்றது. ஆம் சீரகம் வயிற்று தொப்பை, உடல் எடையை குறைப்பதுடன், உடல் கொழுப்பை குறைக்கவும் பயன்படுகின்றது.
கூடவே, பசியை கட்டுப்படுத்துவதிலும், செரிமானத்தை சீராக்குவதிலும், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் சீரகம் உதவுகிறது. அந்த வகையில் தொப்பையை குறைக்க சீரகத்தை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தொப்பையைக் குறைக்கும் சீரகம்
கொதிக்க வைத்த தண்ணீரில் அரை டீ ஸ்பூன் சீரகப்பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறையும். சீரகத்தில் உள்ள மூலக்கூறுகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதுடன், தேனில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நச்சுகளை வெளியேற்றி, உடம்பை குறைக்கின்றது.
ஒரு டம்ளர் மோரில் 1 டீ ஸ்பூன் சீரக பொடியை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பின்பு குடிக்கவும். இவை செரிமானத்தை சீராக்கி, உடல் எடையைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
அரை கப் யோகர்ட்டில் சிறிது சீரகப்பொடியை சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை தினமும் இரண்டு முறை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
1 லிட்டர் தண்ணீரில், 1 டீ ஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை பருகி வந்தால் உடல் எடையும் குறையும்.
image: stock.adobe
அரை டீ ஸ்பூன் சீரகப்பொடியை 1 கிளாஸ் எலுமிச்சை நீர் கலந்த தண்ணீரில் சேர்த்து, சிறிது சுட வைத்து காலையில் குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு எளிதில் கரையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |