சிறுவயதிலேயே சருமம் சுருங்கி விட்டதா? கவலை வேண்டாம்..
பொதுவாக முக அழகு என்பது பெண்களுக்கு மிக முக்கியமானதாகும்.
இதனால் சில பெண்களுக்கு வெளி இடங்களுக்கு செல்லும் முன்னர் முகத்தை அழகுபடுத்திக் கொள்ள நினைப்பார்கள்.
இதற்காக முகத்தில் சில பேக்களை போட்டு முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவார்கள்.
இவ்வாறு செய்வதால் முக்த்திலுள்ள எண்ணெய் பசை, முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பொலிவு இன்மை எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாக மாறுகிறது.
இதனை தொடர்ந்து சிலருக்கு முகத்தில் வயது சற்று அதிகமானால் நம்முடைய தோல் சுருங்க ஆரம்பிக்கும்.
இன்னும் சிலருக்கு பருவக்காலங்களிலே சுருக்கம் இருக்கும். மேலும் இவ்வாறான பிரச்சினைகள் உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரித்ததால் தான் ஏற்படும்.
அந்தவகையில் தற்கால பெண்களின் பெரிய பிரச்சினையாக இருக்கும் தோல் சுருக்கம் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இழந்த அழகை மீண்டும் பெற சில வழிகள்
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை போகும்.
முகத்திற்கு அதிகமான வேலைகள் கொடுத்தால் காலப்போக்கில் அது முகத்தின் பொலிவு,வெண்மை எல்லாவற்றையும் இல்லாமலாக்கி விடும். இதனால் இதற்காக ஜாதிக்காய் பயன்படுத்துவார்கள். இதனால் இழந்த முக அழகை மீணடும் பெற முடியும்.
தொடர்ந்து பழுத்த பப்பாசிப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போன்று போட்டு கழுவினால் முகம் பிரகாசம் பெறும் மற்றும் முகச்சுருக்கம் குணமடையும்.
முகச்சுருக்கம் உள்ளவர்கள் தினமும் காலையில் சுத்தமான பாலிலிருக்கும் ஆடையை எடுத்து முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து விட்டு கழுவினால் நாளடைவில் குணமாகும்.
பழங்கள் அதிகமாக சாப்பிடுவதால் தோல் தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். இதனை தினமும் மதிய நேர சாப்பாட்டிற்கு பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமம் மட்டுமன்றி உடலும் பளபளப்பாகும்.
தேன், மஞ்சள் கலந்து தினமும் முகத்தில் தடவி 10- 15 நிமிடங்கள் வரை முகத்தில் காய வைத்து விட்டு குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பிரகாசமடையும் முகச்சுருக்கம் இருக்காது.