கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம்.. திருமணமாகாத பெண்கள் செய்யலாமா?
பொதுவாக பெரும்பாலானவர்கள் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த தோஷமுள்ளவர்கள் எந்நேரமும் “ஏழரை சனி நடக்கிறது ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ?” என்ற பயத்திலேயே இருப்பார்கள்.
ஆனால் இவர்கள் பயம் கொள்ளும் அளவிற்கு ஏழரை சனியால் பயங்கரமான வாட்டி எடுக்கப்படுவார்கள் என ஜோதிடம் கூறுகின்றது.
இப்படியான தோஷங்கள் உள்ளவர்கள் என்ன மாதிரியான வழிபாடுகளை மேற்க் கொண்டால் தோஷங்களினால் வரும் பிரச்சினைகளிலிருந்து விலக முடியும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
அனுமன் வழிபாடு
தோஷங்களினால் அவஸ்தைப்படுபவர்கள் வாராந்தம் வியாழக்கிழமை அன்று அனுமானுக்கு வழிபாடுகள் செய்ய வேண்டும்.
அதாவது, வியாழக்கிழமை அனுமான் கோயிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்கவும்.
பின்னர் மனதில் அனுமானை நினைத்து கொண்டு ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை கூறியப்படி மூன்று முறை அனுமனை வளம் வர வேண்டும். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இருந்தால் அங்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
தொடர்ந்து 9 வியாழக்கிழமை இந்த வழிபாட்டை செய்து வந்தால் சனி பகவான் தரும் பிரச்சினைகளிலிருந்து விடுபெறலாம்.
ஆண்களும், பெண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
குடும்ப பிரச்சினைகளில் நீங்கி ஓரளவு நிம்மதியாக வாழலாம்.
மந்திரம்
ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய வாயு
புத்ராய மகா பலாய, சீதா துக்க நிவாரணாய
லங்கா விதாஹகாய மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட
பாலகாய சப்த சமுத்ர நிராலங்கிதாய