கால்களில் நகம் பார்ப்பதற்கு சொத்தை போல் இருக்கிறதா? உடனடியாக இதை பண்ணுங்க
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நகம் சொத்தை பிரச்சினை இருக்கும். இது போன்ற பிரச்சினைகள் கால்சியம் குறைப்பாட்டினால் ஏற்படுகிறது.
மேலும் சில பெண்கள் வீட்டிலுள்ள வேலைகள் செய்யும் போது அதிகளவு தண்ணீரில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிய மருந்து வில்லைகளை எடுத்து கொள்ள வேண்டும் அவசியமாகும்.
அந்த வகையில் நகம் சொத்தை பற்றி இன்னும் தெளிவாக பார்க்கலாம்.
சொத்தைக்கான முக்கிய காரணம்
அலுவலகம் செல்லும் ஆண்கள் மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இந்த பிரச்சினை இருக்கும். முக்கியமாக கைகளை விட கால்களில் தான் அதிகமாக இருக்கும்.
இது மட்டுமல்ல சொத்தையாக இருப்பவர்களின் காலணிகளை அணிவதால் கூட இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.
பரம்பரையில் யாருக்காவது இந்த பிரச்சினை இருந்தால் குடும்பத்திலுள்ள யாராவது ஒரு ஆளுக்கு நகம் சொத்தை பிரச்சினை இருக்கும். டி.என்.ஏ வழியாக கடத்தப்படுகிறது.
ஒரு நகம் இவ்வாறு காணப்படும் போது மருந்துவம் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் எல்லா விரல்களுக்கு இந்த நோய் பரவி விடும்.