இந்த வகை பூச்சிகள் கடித்தால் ஆபத்தா? வீட்டு வைத்தியம் எப்படி செய்ற- ன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நம்மை சுற்றியுள்ள சூழலில் சில விலங்குகள், பூச்சிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
அவற்றை நாம் தீண்டும் பொழுது ஒரு வகையான நச்சுக்களை நம்முடைய சருமகங்களில் தெளிக்கும் அல்லது கடிக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் முதலுதவி செய்ய வேண்டும்.
இதனை செய்ய தவறும் பட்சத்தில் அதன் பின்விளைவுகள் கொஞ்சம் ஆபத்தாக இருக்கும். அந்த வகையில், சூழலில் இருந்து தாக்கும் விலங்குகளிடம் எம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்யக் கூடிய தனித்துவமான மருத்துவம் என்ன? என்பதனை பார்க்கலாம்.
பூச்சிகடி வைத்தியம்
1. தேன்குளவி
எதாவது சந்தர்ப்பத்தில் தேன் குளவி கொற்றி விட்டால் அந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும். அப்போது எக்காரணம் கொண்டும் அந்த இடத்தை தேய்க்கக்கூடாது.
மேலும் முள்ளை மற்றும் கொடுக்கு இவை இரண்டையும் எடுத்து விட்டு மண்ணெண்ணெயை கடித்த இடத்தில் தடவவும்.
2. பூரான்
பூரான் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும். இதற்கு சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் விஷம் குறைய ஆரம்பிக்கும்.
3. கம்பளிபூச்சி
மரத்தின் இலைகள், பூக்கள் என தாவரங்களில் இந்த பூச்சி இருக்கும். இது கடிக்காது ஆனால் பூச்சின் மேல் இருக்கும் ரோமம் சருமத்தில் பட்டால் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படும்.
இது போன்ற நேரத்தில் நல்லெண்ணெய் விரல்களில் தேய்த்து மயிர்கள் பட்ட இடத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீக்கம் குறையும்.
4. சிலந்தி
வீட்டை சுத்தம் செய்யும் பொழுது சிலந்தி தாக்கம் இருக்கும். சிலந்தி கடித்தாலோ அல்லது ஏறி சென்றாலும் ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள் + மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்த்தால் சரும பாதிப்பு குறையும்.
அல்லது இரண்டு வெற்றிலை 6 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிடவேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |