காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாமா? மீறினால் என்ன நடக்கும்? தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக எமது முன்னோர்கள் தங்களின் வாழ்க்கை முறையை இயற்கையோடு சேர்ந்து தான் வாழ்ந்தார்கள். ஆனால் மாற்றங்கள் வரவர ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பதே காணாமல் போய் விட்டது.
அக்காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் செம்பு குடத்தில் தான் தண்ணீர் பிடித்து அருந்துவார்கள். ஆனால் தற்போது யார் வீட்டில் செம்பு இருக்கின்றது என்று கேட்டால் அதற்கான விடை கேள்விகுறியாக தான் இருக்கும்.
நாம் நீர் குடிப்பதற்கு பயன்படுத்தும் பிளாஷ்டிக் பாத்திரங்களை விட செம்பு குடத்தில் தண்ணீர் குடித்தால் ஏகப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
அந்த வகையில், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
காப்பர் பாத்திர பாவணை
1. மனித உடலில் செப்பு தாது குறைவாக இருக்கும் பொழுது எலும்புகளில் வலிமை குறைந்து வலிக்க ஆரம்பிக்கும். இது போன்று வலியிருப்பவர்கள் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் இயற்கையான ஒரு தீர்வை பெறலாம்.
2.அடிக்கடி காய்ச்சல், இருமல் ஏற்படுமாயின் அதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் பிளாஷ்டிக் பொருட்களுக்கு பதிலாக செம்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
3. செம்பானது, உடலிலுள்ள அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல் மற்றும் சளி ஆகிய பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது. மேலும் இரத்த யோட்டத்தை அதிகப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
4. செம்பு பாத்திரங்களை தினமும் பயன்படுத்து பொழுது வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும். வயிற்றுவலி அடிக்கடி வருகின்றது என்றால் தினமும் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிங்கள்.
5. வெளிபுறத்தை நாம் சுத்தமாக வைத்து கொள்வது போன்று உடலினுள்ள சில பாகங்களை காப்பர் பாத்திரங்கள் சுத்தமாக வைத்து கொள்ளும். இதனால் வீட்டில் தண்ணீர் குடிக்கும் கோப்பையாவது செம்பாக இருப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |