வீட்டில் அடிக்கடி எலி தொல்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..
பொதுவாக சில வீடுகளில் எலி தொல்லை அதிகமாக இருக்கும்.
இதற்காக மருந்துகள், எலிப் பொறி என பல முறைகளில் முயற்சி செய்திருப்போம். அவற்றையும் தாண்டி எலியின் வருகை அதிகமாக உள்ளதா?
ஆம், எனின் அதனை எப்படி வர விடாமல் செய்வது என்பதனை தேட வேண்டும்.
எலிகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட ரெம்ப புத்திசாலித்தனம் வாய்ந்தது.
பேக்ஸ் , எலக்ட்ரானிக்ஸ் கேபில்கள் இப்படி எந்த ஒரு பொருளையும் விடாமல் கடித்து விடும்.
அதனை கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டால் குட்டி போட்டு இனத்தை பெருக்கி விடும். இவற்றை தாண்டி எலிகள் தன்னை அறியாமல் மனிதர்களுக்கு நோய்களையும் பரப்பி விடுகின்றன.
இதனால் மனிதருக்கு உயிரிழப்பு, காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இப்படி ஏகப்பட்ட பின்விளைவுகளை தரும் எலிகளை எப்படி விரட்டலாம் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மா - மூன்று டேபிள் ஸ்பூன்
- கற்பூரம் - 2
- பற்பசை - கொஞ்சம்
- வினாகிரி - தேவையான அளவு
செய்முறை
ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் மா, வினிகிரி ஆகியவற்றை போட்டு சப்பாத்திக்கு மா பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
பின்னர் கற்பூரம், பற்பசை இவை இரண்டையும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பிசைந்து வைத்திருக்கும் மா கலவைக்குள் கற்பூர பசையை வைத்து உருட்டிக் கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து எலிகள் வரும் வழியை குறித்து மா உருண்டைகளை அங்கு வைக்கவும்.
இந்த உருண்டைகளை ஒரு தடவை எலி சாப்பிட்டு விட்டால் மீண்டும் உங்கள் வீட்டு பக்கம் வராது.
மாறாக எலிகளுக்கு இதனை கொடுப்பதால் சாகாது. கற்பூர வாசனை நுகர்ந்த பின்னர் எலிகள் அந்த இடத்திற்கு திரும்பாது.
முக்கிய குறிப்பு
கார்களில் எலி நடமாட்டம் அதிகமாக இருந்தால் அங்கும் வைக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இப்படியான உருண்டை வைப்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |