ரூ.15க்கு 24 மணிநேர அன்லிமிட்டெட் 5G டேட்டா – ஜியோவின் புதிய அதிரடி திட்டம்!
Reliance jio introduce unlimited 5g plan for rs15: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.15 விலையில் புதிய அன்லிமிட்டெட் 5G டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் 24 மணி நேரத்திற்கு அன்லிமிட்டெட் அதிவேக 5G டேட்டாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும், ரீசார்ஜ் செய்தவுடன் இச்சேவையை உடனடியாகப் பயன்படுத்தலாம்.

அதிக டேட்டா தேவைப்படும் விளையாட்டு செயலிகள், மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் பெரிய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.அத்துடன், மொபைலின் Wi-Fi Hotspot வசதி மூலமாகவும் டேட்டாவைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
ரீசார்ஜ் செய்வது எப்படி?
ஜியோ வாடிக்கையாளர்கள் MyJio செயலி, ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் ஊடாக இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் ஜியோ நிறுவனத்தின் என்டர்பிரைஸ் இணையதளத்திலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |