ஒரு நபர் எத்தனை சிம் கார்டு பயன்படுத்தலாம்? 2 லட்சம் அபராதம் ஜாக்கிரதை
இன்றைய டிஜிட்டல் உலகில் ஒரு நபர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம் என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒரு நபருக்கு எத்தனை சிம் கார்டு?
இன்றைய காலத்தில் ஒருவர் பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது அளவுக்கு அதிகமாக சிம் கார்டு வைத்திருப்பது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2023ம் ஆண்டின் இந்தியத் தொலைத்தொடர்பு சட்டம் ஒரு நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம் என்ற விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
அதன்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டு வரை வைத்திருக்க அனுமதி உண்டு. இந்த 9 சிம் கார்டுக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமாம்.
ஆனால் ஜம்பு காஷ்மீர் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நபர் ஒருவர் 6 சிம் கார்டு மட்டுமே வைத்திருப்பதற்கு அனுமதி உண்டாம்.
உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |