இந்த இரகசியம் தெரிந்தால் இனி சண்டையே வராது.. பெண்கள் தன் துணையிடம் விரும்பும் பண்புகள்
பொதுவான பெண்கள் தன் துணையிடம் சில விடயங்களில் ஓபனாக கூறமாட்டார்கள். மாறாக இரகசியமாக வைத்து கொண்டு அவற்றை துணை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதனை சில செயல்கள், பேச்சிகள் போன்றவைகள் மூலம் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.
இந்த இரகசியத்தை புரிந்து கொண்டு துணை செயற்பட்டால் அவர்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை, பாசம் உருவாகும்.
சிலர் இந்த இரகசியம் தெரியாமல் எந்நேரமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டையின் முடிவில் தான் இப்படி விருப்பம் இருந்தது என்றே தெரியவரும்.
அந்த வகையில் உறவுகளை மேம்படுத்த பெண்கள் துணையிடம் என்னென்ன விடயங்களை விரும்புகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உறவுகளை மேம்படுத்தும் டிப்ஸ்
1. பெண்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமான உறவை விரும்புவார்கள். சவாலான காலங்களில் பச்சாதாபம், புரிதல் மற்றும் தாங்கள் சொல்வதை கேட்க ஒரு துணை வேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் நினைத்த நேரத்தில் துணை பக்கத்தில் இருந்தால் காதல் அதிகரிக்கும்.
2. பெண்கள் எதிர்பாராத பரிசுகள் அல்லது திட்டமிடப்படாத சுற்றுலா ஆகியவற்றை விரும்புவார்கள். இது போன்ற விடயங்களை ஆண்கள் கேட்காமலேயே செய்தால் புரிதல் அதிகரிக்கும்.
3. ஆண்கள் அதிகமாக தன்னுடைய நேரம் செலவழிக்க வேண்டும் என நினைப்பார்கள். பெண்கள் பொதுவாக அதிகமாக பேசுவார்கள் அதனை கேட்க ஒரு துணை இருந்தால் அவர்களுக்கு நடுவில் ஒரு போதும் சண்டையே வராது.
4. அவ்வப்போது அரவணைப்புகள், முத்தங்கள் மற்றும் பாராட்டுகளை விரும்புவார்கள். இவற்றை பெண்கள் இரகசியமாக எதிர்பார்ப்பார்கள். இவற்றை தரும் ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும்.
5. ஏதாவது பிரச்சினை வந்தால் தன் துணை தன் பக்கம் பேச வேண்டும் என பெண்கள் நினைப்பார்கள். இவற்றை செய்யும் ஆண்களை பெண்களுக்கு அதிகமாக பிடிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |