சிலேட்டு குச்சி சாப்பிடும் பழக்கம் இருக்கா..? இந்த அதிர்ச்சி பதிவு உங்களுக்காக தான்!
சிலேட்டு குச்சி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிலேட் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பல்பத்தை சிலர் யாருக்கும் தெரியாமல் சாப்பிடுவார்கள். இவ்வாறு செய்வது குழந்தை பருவத்திலிருந்தே பழகியும் விடுவார்கள்.
ஆனால் இவை பாரிய பக்கவிளைவை ஏற்படுத்துவதுடன், உடம்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, இந்த பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கவும் செய்கின்றது.
சிலேட்டு குச்சி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் என்னென்ன தீமைகளை சந்திக்க உள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிலேட்டு குச்சி சாப்பிடுறீங்களா?
சிலேட்டு குச்சி சுண்ணாம்பு கொண்டு தயாரிப்படுவதால், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இவற்றினை சாப்பிடுவதற்கு முக்கிய காரணம் இரும்புச்சத்து குறைபாடே.
பெண்களுக்கு சிறுநீரக கல் உருவாக முக்கிய காரணமாக இந்த பழக்கம் இருக்கின்றது. சிறுவயதில் குச்சி சாப்பிட்டவர்களின் விளைவு தான் இதுவாகும்.
செரிமான பிரச்சினை, இரத்த சோகை உண்டாவதுடன், முதலாவதாக சிறுநீரகம் பாதிக்கப்படுகின்றது. மேலும் மாதவிடாய் தள்ளிப் போவது, வயிற்றுப் போக்கு, வயிற்றில் கட்டி போன்ற பிரச்சினை ஏற்படும்.
பற்களும், தாடையும் பாதிக்கப்படுவதுடன், நாளடைவில் பற்கள் ஆரோக்கியமில்லாமல் போய்விடும். தாடையிலும் வலி ஏற்பட்டுவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |