கொளுந்து விட்டு எரியும் பிக்பாஸ் வீடு! மைனாவுக்கு எதிராக தனலெட்சுமியின் முடிவு
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மைனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தலைவருக்கு எதிரான வழக்கு
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் தலைவராக மைனா நந்தனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் போட்டியாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி வாதப்படவுள்ளது.
இதன்படி மைனா நந்தனி வீட்டின் தலைவராக இருப்பது பிடிக்கவில்லை என தனவெட்சுமி வழக்கு பதிவு செய்துள்ளார்.
தனலெட்சுமியின் கோரிக்கை
இது குறித்து ஆயிஷாவிடம் தெரிவிக்கையில், கடந்த 40 நாட்களாக பிக் பாஸ் வீடு இருந்ததை விட இனி வரும் காலங்களில் இருக்க விடாமல் மாற்றியமைக்க யோசித்திருந்தேன்.
ஆனால் பிக் பாஸிற்கு இது புரியவில்லை. இதனால் நான் மைனா மீது வழக்கு பதிவு செய்கிறேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் வழக்கை தொடருவதற்கு மைனாவையும் சிவினையும் சாட்சிகளாக அழைத்த போது இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.