பானை போல வீங்கியிருக்கும் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இரவு நேரத்தில் இந்த அற்புத பானத்தை மட்டும் குடிங்க
பொதுவாக இன்றைய ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி பெரும் பிரச்சினையாக தொப்பை பிரச்சினை உள்ளது. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றனர். என்னத்தான் தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரியும் என்றாலும், ஒருசில உணவுப் பொருட்களும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவும். அதிலும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் ஒருசில பானங்களைக் குடித்துவிட்டு தூங்குங்கள்.
இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவாக எரிக்கப்படும். தற்போது தொப்பையைக் குறைக்க இரவு நேரத்தில் குடிக்க வேண்டிய சில முக்கிய பானங்களைக் என்னென்ன என்பதை பார்ப்போம். பிளெண்டரில் வெள்ளரிக்காய் பார்ஸ்லியை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாற்றினை சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பானம் நீர் எடையை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இந்த பானத்தை இரவு உணவிற்கு பின் குடியுங்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 1 டீஸ்பூன் பட்டைத் தூளை சேர்த்து இறக்கி, 10 நிமிடம் மூடி வைக்கவும். பின் இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும். வெந்தய நீரை இந்த நீரை இரவு தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இந்த பானம் தயாரிப்பதற்கு நீரில் வெந்தயத்தை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் மூடி வைத்து, பின் குடிக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊறறி நன்கு கொதிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் காய்ந்த சீமைச் சாமந்தி இலைகளைப் போட்டு 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், தொப்பை குறைவதோடு, நல்ல தூக்கமும் கிடைக்கும். கற்றாழை ஜெல்லை பகுதியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை ஜாரில் போட்டு, அதில் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டு, டம்ளரில் ஊற்றி, சுவைக்கு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடுவதோடு, இந்த பானம் மலமிளக்கியாகவும் செயல்படும்.
ஒரு டம்ளர் சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சுவைக்கு தேன் சேர்த்து, இரவு தூங்கும் முன் குடித்தால், சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் நீங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் மேம்படும், செரிமானம் சீராக இருக்கும்.