சுகர் லெவலை வேகமாக குறைக்க வேண்டுமா? முள்ளங்கியை மட்டும் எடுத்துக்கோங்க
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் முள்ளங்கியின் பயன்களை மேலும் அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைப்பதில் முள்ளங்கி பெரிதும் உதவியாக இருக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உணவுகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றது.
அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் முள்ளங்கி
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கின்றது. முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.
வைட்டமின் சி சத்து நிறைந்த முள்ளங்கி, நீர்ச்சத்து மிகுந்த காய். சாம்பார், சாலட், கறி, சூப், பராந்தா என பல வகைகளில் இதை உட்கொள்ளலாம்.
மேலும் இதில் பாஸ்பரஸ், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது. முள்ளங்கி குறைந்த கலோரி மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உள்ள காயாக இருப்பதால் இதை சுகர் நோயாளிகள் அதிகம் உட்கொள்ளலாம்.
எடை இழப்பிற்கும், கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் செய்கின்றது.
மேலும் முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுவதுடன், சளி மற்றும் இருமலில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றது. இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |