குட் நியூஸ் சொன்ன ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா.. குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கிங்ஸ்லி- சங்கீதா
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தம்பதிகளாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
குட்நியூஸ்
இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா நற்செய்தியொன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
முன்னதாக சங்கீதாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பதாக கூறிய வந்த நிலையில், அது அவர் குழந்தை அல்ல அவரின் சகோதரியின் குழந்தை என விளக்கம் கொடுத்தார்.
தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்தான பதிவு எதுவும் சங்கீதா பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |