குழந்தையுடன் முதல் காதலர் தினம்... அசத்தலாக கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கிதா தம்பதிகள் தங்களின் குழந்தையுடன் முதல் காதலர் தினத்தை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் மற்றும் காணொளி இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை ஆரம்பித்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து தனது 47 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44. இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இவர்கள் தங்களின் குழந்தையின் ஒவ்வொரு விசேட நிகழ்வையும் மறக்காத பொக்கிஷ நினைவுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.

அந்தவகையில் தங்கள் குழந்தையின் பெயர்சூட்டும் விழாவில் ஆரம்பித்து ஒவ்வொரு பண்டிகையையும், விசேட தினங்களையும் அழகிய நினைவுகளாக மாற்றும் முயற்சியில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் போட்டோ ஷூட் நடத்திவருகின்றார்கள்.

அந்தவகையில், தற்போது தனது குழந்தையுடன் முதல் காதலர் தினத்தை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |