ஹீரோயின் போல் அழகாகணுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க
Skin Care
By Sinduja
பொதுவாகவே சிவப்பு சந்தனம் என்பது அதிக சத்துக்கள் நிறைந்தது. அதுமட்டுமில்லாமல் இது சருமத்துக்கும் மிகவும் சிறந்த ஒன்றாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் சிவப்பு சந்தனமானது, சருமத்துக்கு என்னென்ன வகையில் உதவுகின்றது எனப் பார்க்கலாம்.
- வெயிலில் அதிகமாக இருப்பதால் சருமம் கருமையாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் சிவப்பு சந்தனத்தைக் கொண்டு முகக் கருமையை நீக்கலாம். 2 தேக்கரண்டி சிவப்பு சந்தன பொடியில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம், கை, கால் என்பவற்றில் தடவி அரை மணிநேரம் ஊறவைத்து கழுவினால் நல்ல மாற்றம் ஏற்படும்.
- 2 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸட் போல் செய்து தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வந்தால் சருமம் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
- சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வோட்டர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி ஊறவைத்து, கழுவி வர முகப்பரு பிரச்சினை சரியாகும்.
- பருக்களால் வந்த தழும்பை நீக்க, 4 தேக்கரண்டி தேங்காய்ப் பாலில், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய், மற்றும் 4 தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்து கலந்து முகத்துக் தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மாறும்.
- ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர்/பாலை ஊற்றி, அதில் 1 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடி மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவிழ அரை மணிநேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். அப்போது சோர்வாக இருந்த முகம் பொலிவடையும்.
- 1 தேக்கரண்டி சிவப்பு சந்தனப் பொடியில் ஒரு எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பின் கழுவ வேண்டும். இதனால் சரும துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US