இதய நோயாளிகள் தயிர் சாப்பிடலாமா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தயிர் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றும்.
தயிரை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பாலிலிருந்து உருவாவதுதான் தயிர். தயிரிலிருந்து உருவாவதுதான் மோர். தயிரின் ஒரு பகுதிதான் நெய். ஆனால், இவற்றின் குணாதிசயங்கள் வெவ்வேறாக காணப்படும்.
தயிர் இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகும்.
இதில் புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது.
தினமும் தயிர் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மை
- அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
- தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
- மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள் வராது.
- தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது.
- இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது.
- இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.
எந்த தயிர் சாப்பிடக்கூடாது?
கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்பு தயிரை வாங்கக்கூடாது.
அவை மிகவும் பதப்படுத்தப்பட்டதால், செரிமான அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.
யார் தயிர் சாப்பிடக்கூடாது?
தயிர் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது தயிரை சேர்க்கக்கூடாத சிகிச்சை முறையில் ஈடுபட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும். எனவே, தயிரை உணவு முறையில் சேர்த்துகொள்வதற்கு முன்பு, மருத்துவரிடம் கலந்துரையாடி கொள்ளுங்கள்.