இளசுகளை கவர்ச்சியால் கட்டிப்போட்ட Love Today பட நடிகை இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?
இளசுகளை கவர்ச்சியால் கட்டிப்போட்ட லவ் டுடே பட நடிகை மந்த்ரா இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரங்களை அவரே பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நடிகை மந்த்ரா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை தான் மந்த்ரா.
இவரின் இயற்பெயர் விஜயா என்றாலும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது ராசி என்றால் தானட பலருக்கும் தெரியும்.
கடந்த 1980-ம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த மந்த்ரா தன்னுடைய 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து, கடந்த 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாகவே மாறி வலம் வந்தார். தமிழில் Love Today, கண்ணன் வருவான், கொண்டாட்டம், கங்கா கௌரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் தங்களின் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து விட்டு, சினிமாவில் கம்பேக் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக நடிகை ரம்பா சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் போன்று 90களில் இருந்த நடிகைகளான சிம்ரன், லைலா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் கம்பேக் கொடுத்து வருகிறார்கள்.
மந்த்ரா தற்போது என்ன செய்கிறார்?
இந்த சமயத்தில், நடிகை மந்த்ரா பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய மந்த்ரா குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
கணவர் மற்றும் அவருடைய சகோதரர் கூட சினிமாவில் மீண்டும் நடிக்க போ எனக் கூறியதற்கு, “வேண்டாம்” எனக் கூறி விட்டு இருக்கிறாராம். “திருமணமாகி 10 வருடங்களுக்கு பின்னர் தான் எனக்கு குழந்தை பிறந்தது. அதனால் என்னுடைய வாழ்க்கை பெரிதாக போர் அடிக்கவில்லை..” என்றும் பேசியிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றதால் மந்த்ராவின் கம்பேக்கை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |