சிவப்பு முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சிவப்பு முள்ளங்கியில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் மாரடைப்பு தடுக்கப்படும். இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும், புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும் குணமும் உள்ளது.
மேலும், உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குதல், கண்களின் பார்வைக்கு உதவி செய்தல், எலும்புகள் மற்றும் தோள்களை நலமுடன் வைத்திருக்க உதவுகிறது.
இரத்தத்தின் கொழுப்பு அளவை குறைத்து மூட்டு வாத நோய், கண் நோய், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதயத்தை நலமாக வைக்க சிவப்பு முள்ளங்கியை சாப்பிடலாம்.
புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், மார்பக புற்றுநோய் மற்றும் காலன் புற்றுநோய் போன்றவையும் வராமல் தடுக்கிறது.
இதில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்து தாதுக்கள் எலும்புகளை உறுதியாக வைக்கிறது. உடலமைப்பை மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் தினமும் சிவப்பு முள்ளங்கியை உணவில் சேர்த்து கொள்ளலாம். நார்ச்சத்துக்கள் நிரம்பிய சிவப்பு முள்ளங்கி, குடல் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவி செய்கிறது. நரம்புகளை செயல்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சமன் செய்யவும் உதவுகிறது.