தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்தும் முள்ளங்கி: ஆனால் யார் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
காய்களில் முள்ளங்கிக்கு என ஒரு தனி சிறப்பிடம் உண்டு. பச்சையாக சாப்பிட்டாலும் சரி, சமைத்து சாப்பிட்டாலும் சரி, உடலுக்கு நல்ல பயன்களை கொடுப்பது முள்ளங்கி. அது மட்டுமல்ல, முள்ளங்கிக் கிழங்கைவிட, அதன் கீரையில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகம் உள்ளன.
100 கிராம் முள்ளங்கிக் கீரையில் உள்ள கலோரி அளவு 28 ஆகும். அதனால், முள்ளங்கிக் கீரையை பச்சையாக சாப்பிட்டால் அது கொடுக்கும் பயன்கள் அளவிட முடியாதவை.
முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் அதிலுள்ள பெரும்பாலான வைட்டமின்களும், தாது உப்புகளும் அழிந்துவிடும். அதுமட்டுமல்லாமல், முள்ளங்கியின் தனிசிறப்பான நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களும் சிதைந்து போய்விடும். எனவே, முள்ளங்கியை துண்டுகளாக்கி எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலடாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பசியைத் தூண்டும் இயல்புடைய முள்ளங்கி, தோல் நோய்களையும் குணப்படுத்தும். ரத்த சுத்தீகரிப்பான் என்றே சொல்லும் அளவுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்பு கொண்டது முள்ளங்கி. சிவப்பு முள்ளங்கியில் உள்ள சிறப்பு பண்பானது, நரம்புகளுக்கு வலு சேர்ப்பது. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவை மேம்படுத்தும்.
மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறுகள், நெஞ்சுவலி, சிறநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை, போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி மற்றும் அதன் கீரைக்கு உண்டு.
மூலநோய் இருப்பவர்கள் காலையும், மாலையும் 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கியின் சாறை அருந்தினால் நோய் கட்டுப்படும்.
குழந்தைகள் சுறுசுறுப்பாய் இருக்கவும், உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கியையும், அதன் கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உள்ளன.
வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக்கிழங்கைச் சாப்பிடலாம். ஆனால் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ளவும்.