ரத்த நிறத்தில் காய்த்த வெண்டைக்காய்! ஒரு கிலோ மட்டும் என்ன விலை தெரியுமா?
ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளில் முக்கியமானது வெண்டைக்காய் என்பது பலரும் அறிந்த ஒன்றே, வழக்கமாக பச்சை நிறத்தில் வெண்டைக்காய் காய்க்கும்.
ஆனால் மிக வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் வெண்டைக்காய் காய்த்துள்ளது, பச்சை நிற வெண்டைக்காயை விட இதில் சத்துக்கள் அதிகமாம்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய தோட்டத்தில் சிவப்பு நிற வெண்டைக்காயை விளைவித்துள்ளார்.
ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம், உயர் கொழுப்பு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படும் நபர்களுக்கு இது நல்ல பலனை தருமாம்.
மேலும், வாரணாசியிலிருந்து ஒரு கிலோ விதைகளை வாங்கி இந்த வெண்டைக்காய்களை விளைவித்ததாகவும், 40 நாட்களில் காய்க்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார் குறித்த விவசாயி.
அத்துடன் எந்தவித செயற்கை உரங்களும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விளைவித்ததால் பயன்களும் கூடுதல் என்கிறார்.
Madhya Pradesh | Misrilal Rajput, a Bhopal-based farmer, grows red okra (ladyfinger) in his garden.
— ANI (@ANI) September 5, 2021
"This is 5-7 times more expensive than ordinary ladyfingers. It's being sold at Rs 75-80 to Rs 300-400 per 250 gm/500 gm in some malls," he says pic.twitter.com/rI9ZnDWXUm