விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை! செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி நாளில் ஸ்பெஷலான பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விதவிதமாக கொழுக்கட்டை செய்து அசத்துவார்கள்.
அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் கொழுக்கட்டையில் ஒன்று தான் பால் கொழுக்கட்டை ஆகும். அதனை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 2 கப்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
பால் - 1 டம்ளர்
சீனி - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரம் ஒன்றில் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு, சுடுதண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து கொழுக்கட்டை பதத்திற்கு கொண்டு வரவும்.
பின்பு சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி அதனுடன் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டையைச் சேர்க்கவும்.
இதனுடன் சீனியை சேர்த்து சற்று கிளறவும். பின்பு தேங்காயை பால் எடுத்து இதனுடன் சேர்த்து கலந்துவிடவும். கொழுக்கட்டை சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
கடைசியாக சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிய பின்பு சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |