நீரிழிவு நோயாளிகள் ருசித்து சாப்பிட கூடிய சிகப்பு அவல் உம்புமா.. இனி இப்படி செய்து சாப்பிடுங்க!
நீரிழிவு நோயாளிகள் பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
சிகப்பு அவல் சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயாரிக்கப்படுகின்றது.
உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன.
சிகப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம், புட்டு போன்றவை செய்து உண்ணப்படுகிறது.

வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட் கலோரி உள்ளது.
நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் இது முதலிடம் வகிக்கின்றது.
மேலும் இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது.
சிவப்பு அவலில் நார்ச்சத்து , கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை காணப்படுகின்றது. பொதுவாக அவலை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் அச்சம் இன்றி சாப்பிடக்கூடிய அவலை கொண்டு சுவையான உப்புமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
- அவல் - முக்கால் ஆழாக்கு
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- கடுகு - கால் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி. இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.