ராதிகாவின் தொல்லை தாங்க முடியாமல் நடுத்தெருவிற்கு வந்த கோபி - தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ராதிகாவின் தொல்லை தாங்க முடியாமல் நடுத்தெருவிற்கு இறங்கிய கோபியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
பாக்கியாவிடம் அவமானப்பட்டு தற்போது ராதிகாவுடன் கோபி தனியாக இருந்து வருகிறார்.
ராதிகாவின் தொல்லை தாங்க முடியாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மாமியாரிடம் திட்டு வாங்கி வரும் கோபி, தற்போது இனியாவை தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அந்த வகையில் இனியாவின் பள்ளி நிகழ்வில் ராதிகாவுடன் கலந்து கொள்கிறார். இதனை இனியாவால் ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டிற்கு வந்து பெரிய அலப்பறை செய்து வருகின்றார்.
கோபிக்கு இப்படியொரு நிலையா?
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கோபி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதன்படி, தெருவை சுத்தம் செய்வது போன்று வீடியோக்காட்சியை பகிர்ந்து அதில், “ இரண்டு மனைவிகள் கட்டினால் இது தான் நிலைமை..” என கவலையாக கூறியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள், “ நீங்க போட்ட ஆட்டத்திற்கு இது தேவை தான் கோபி..” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |