அடி கொஞ்சம் பலமோ கோபி? கோபத்தின் உச்சத்தில் ராதிகா கொடுத்த பளார்
பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபி ராதிகாவிடம் சிக்கி பெரும் அவதிப்படும் காட்சி வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வருகின்றார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், சமீபத்தில் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்து, பின்பு நானே கோபியாக நடிப்பை தொடர்கிறேன் என்று காணொளி வெளியிட்டிருந்தார்.
கோபியின் காணொளி
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கோபி, அவ்வப்போது காணொளி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
தற்போது குறித்த சீரியலில் ராதிகாவுடன் பாக்கியா வீட்டில் வாழ்ந்து வரும் கோபி, மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார்.
இனியா பள்ளியில் மிகச்சிறந்த மாணவியாக பெயரெடுத்துள்ள நிலையில், இந்த நிகழ்வில் கோபியும் ராதிகாவிற்கு தெரியாமல் கலந்து கொண்டுள்ளார்.
பின்பு ராதிகாவிடம் மாட்டிக்கொண்ட கோபி காரில் வைத்தே ராதிகாவிடம் குத்து வாங்கியுள்ளார். தற்போதுள்ள கோபியின் காணொளியினை அவதானித்து வரும் ரசிகர்கள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு வருகின்றனர்.