45 வருடங்களுக்கு மேலாக பெற்றாரை தேடும் பிரபல நடிகர்.. கண்ணீருடனான அனுபவ பகிர்வு
45 வருடங்களுக்கு மேலாக பெற்றாரை தேடுகிறேன் என நடிகர் விக்னேஷ் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விக்னேஷ்
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் விக்னேஷ்.
இவர் 1992-ம் ஆண்டு "சின்ன தாயீ" என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்தவர் சரியாக வாய்ப்பு அமையாத காரணத்தினால் கொஞ்ச நாட்கள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
பின்னர் “சந்திரமுகி 2 ” படத்தில் வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவிற்குள் ரீ- என்றி கொடுத்துள்ளார்.
பெற்றாரை தொலைத்து விட்டேன்..
இந்த நிலையில் 45 வருடங்களாக தன்னுடைய அப்பா- அம்மாவை தேடி வருவதாக பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
ஹைதரபாத்தில் வசித்து வந்த என்னுடைய தந்தை அங்கிருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனக்கு சரியாக 3 வயது இருக்கும் போது அம்மாவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக என்னை தாத்தா- பாட்டியிடம் விட்டு சென்றார்.
தற்போது அவர் 45 வருடங்கள் சென்று விட்டது. இதுவரையில் யாரும் என்னை தேடி வரவில்லை. ஆனால் நான் அவர்களை தொடர்ந்து தேடி வருகிறேன். என்னை ஏன் தேடி வரவில்லை என கேட்க வேண்டும்..” என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ நம்பிக்கையோடு இருங்கள் கிடைப்பார்கள்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |