தம்பதிகளுக்கு விவாகரத்து நடக்க இது தான் காரணம் - சாணக்கியர் கருத்து என்ன?
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் ஏன் விவாகரத்து வருகின்றது அதற்கான காரணம் என்ன என்பதை சாணக்கியர் விளக்குகிறார்.

விவாகரத்து ஏற்பட காரணம்
ஒருவனது வாழ்க்கையில் அவனுக்கு குடும்பமும் இல்லை, நண்பர்களும் இல்லை, துணைக்கு யாரும் இல்லை என்பது மரணத்திற்கு சமமானது என சாணக்கியர் கூறுகிறார்.
ஒரு கணவன் மனைவி இருவருகிடையிலும் பேசி்க்கொள்ளவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிறிய இடைவெளி உண்டாகும்.
நம்பிக்கை - நம்பிக்கை என்பது ஒரு உறவின் அடித்தளம். அதை நாம் எளிதில் யாருக்கும் கொடுத்துவிட கூடாது. தக்க நேரம் வரும் வரை யாரையும் முழுமையாக நம்ப கூடாது.
ஆனால் ஒருவருக்குள் ஒருவர் எப்போதும் சந்தேகித்துக்கொண்டு இருக்க கூடாது. அப்படி சந்தேகப்பட்டால் அந்த உறவு உளிதில் முறியும்.

சுயநலம் - நாம் அம்மா அப்பாவிடம் தனியாக வாழும் போது நம்மை பற்றி சிந்திக்க நம் பெற்றோர் இருப்பார்கள். ஆனால் நம்மை நம்பி வந்த துணை நம்முடன் இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாமல் யாராவது ஒருவர் தன்னை பற்றி மட்டும் நினைத்து சுயநலத்துடன் நடந்து கொண்டால் அந்த உறவில் நீடிப்பு இருக்காது.
ஈகோ - ஒரு கணவன் மனைவி உறவில் இருவரில் எவருக்கேனும் ஒருவருக்கு பிடிவாதம் அதாவது ஈகோ இருந்தால் அந் உறவில் பிரிவு இருக்கும். இதில் நான் தான் சரி என்ற கருத்து வேறுபாடு நடைபெற கூடாது. இதை சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

சாணக்கியர் கூறுகிறார், இருவரின் சித்தாந்தமும் மிகவும் வித்தியாசமாக இருந்து, அதனால் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டால், உறவைத் தக்கவைப்பது கடினம். எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு மிகவும் சிறப்பாக உறவை கொண்டு செல்வது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |