பட்டன் போன் பயன்படுத்தும் ஜனநாயகன் இயக்குநர் ஹெச்.வினோத்
இயக்குநர் ஹெச்.வினோத் தான் பட்டன் போன் பயன்படுத்துவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
என்ன காரணம் தெரியுமா?
விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ஜனநாயகன் படத்தை இயக்கிய ஹெச்.வினோத், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பல்வேறு செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அந்த பேட்டியில், கதை எழுதும்போது தனிமையான இடங்களுக்கு சென்று ஸ்மார்ட்போனை பயன்படுத்த மாட்டீர்களா என்று கேட்கப்பட்டது.
மேலும், சிலருக்கு தொழில் காரணமாக ஸ்மார்ட்போன் அவசியம். உதாரணமாக, ஜி-பே போன்ற வசதிகளை பயன்படுத்த வேண்டியவர்களுக்கு அது தேவை. ஆனால் எனக்கு அப்படி இல்லை. அதனால் என்னால் ஸ்மார்ட்போன் இல்லாமலும் இருக்க முடியும் என்று கூறினார்.

இன்று ஒரு ஏழை மனிதருக்குக் கூட வேலைக்காக ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தாததை நான் பெருமையாக நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தால் என் நேரத்தை சேமிக்க முடிகிறது. போன் இருந்தால் தெரியாமலேயே ஏதாவது பார்த்துக்கொண்டே நேரம் செல்கிறது. நேரத்தின் மதிப்பு வயதாகும்போதுதான் நன்றாக புரிகிறது என்று ஹெச்.வினோத் கூறினார்.