என்னது அம்பானி வீட்டில் ஒரு ஏசி கூட இல்லையா? காரணம் என்ன தெரியுமா?
முகேஷ் அம்பானியின் வீடு உலகின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஏசி இல்லாத வசதி என்று ஒன்றுமே இல்லை என்பது ஆச்சரியத்தை தருகின்றது.

அம்பானி வீடு
இந்தியாவில் மிக ஆடம்பரமான வீடு தான் முகேஷ் அம்பானியின் வீடு. இது உலக ஆடம்பர விடுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் வீடு அன்டிலியா என்று அழைக்கப்படுகின்றது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான தனியார் இல்லங்களில் ஒன்றாக கருதப்படகின்றது.

சுமார் ₹15,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த 27 மாடி மாளிகையில், ஆடம்பரத்திற்குக் குறைவே இல்லை. இது பிரமிக்க வைக்கும் கண்ணாடி மற்றும் பளிங்கு முகப்புகள், தொங்கும் தோட்டங்கள், ஒரு பனி அறை, ஒரு திரையரங்கம், ஒரு உடற்பயிற்சி கூடம் இப்படி பலவற்றை கொண்டுள்ளது.
ஆனால் இவ்வளவு பிரமாண்டம் இருக்கும் இந்த வீட்டில் ஏசி இல்லை என்றால் நீங்கள் நம்புவிர்களா? ஆனால் அது தான் உண்மை இந்த வீட்டில் ஏசி இல்லை. இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது.

ஏன் ஏசி இல்லை?
மும்பை போன்ற வெப்பமான இடத்தில் ஏசி இல்லாமல் வாழ்வது ஒரு சவால் தான். ஆனால் இந்த 27 மாடிக் கட்டிடம் ஏசி இல்லாமலேயே குளிர்ச்சியாக இருக்கிறது.
அது எப்படி என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில், அன்டிலியாவில் அதாவது அம்பானியின் ஆடம்பர வீட்டில் ஏசிக்குப் பதிலாக அதிநவீன மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பைப் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த அமைப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏசிக்கு இருப்பது போன்ற வெளிப்புற அமுக்கிகளோ அல்லது வெளிப்புற அலகுகளோ இருகடகாது. இதனால் கட்டிடத்தின் அழகியல் கவர்ச்சி தக்கவைக்கப்படுகிறது.

காரணம்
ஏசி இல்லாததற்கு காரணம் இந்த வீட்டின் வெளிப்புறத்தில் இருப்பது போல தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க, கட்டிடக் கலைஞர்கள் இப்படி முடிவு எடுத்துள்ளனர்.
உள்ளே, உலகெங்கிலும் இருந்து கொண்டுவரப்பட்ட விலையுயர்ந்த பளிங்குக் கற்கள், அரிய வகை பூ ஜாடிகள் மற்றும் செழிப்பான வீட்டுத் தாவரங்களால் அன்டிலியா அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ஏசிக்களின் கடுமையான குளிர் காற்றும், வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் இந்த அமைப்பை சீரழிக்க நேரிடும். இதனாலேயே இங்க ஏசி இல்லை.
இதற்காக தான் இங்கு வீடு தானாகவே தேவையான குளிர்ச்சியை பெறுவது போல அமைக்கப்பட்டது.
தாவரங்கள் மற்றும் பளிங்குக் கற்களின் தேவைகளுக்கு ஏற்ப, வீடு முழுவதும் வெப்பநிலையும் அதுவே நிர்ணயிக்கும். இதற்காக தான் அம்பானி தன்னுடைய ஆடம்பரமான வீட்டில் ஏசி பொருத்தவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |