பெயரை குறிப்பிடாமல் CWC-ல் இருந்து வெளியேறியதன் காரணத்தை கூறிய மணிமேகலை! காரணம் இவரா?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஒலிபலப்பாகிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வெளியேறியதற்கான காரணத்தை தற்போது மணிமேகலை யூடிப் வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.
CWC-ல் இருந்து வெளியேறிய மணிமேகலை
கடந்த நான்கு சீசன்களில் மிகவும் கலகலப்புடன் நடந்து வந்த குக் வித் கோமாளியில் தற்போது முக்கியமான நபர்கள் வெளியேறி உள்ளனர். அந்த வகையில் முக்கிய நபரான வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில், கோமாளியாகவும் நம்மை மகிழ வைத்து பின் தொகுப்பாளினியாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலையும் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதற்கான காரணத்தை அவர் தற்போது தன்னுடைய யூடியூப் பகுதியில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும் போது "நான் இந்த சீசனில் தொகுப்பாளினியாவேன். எனக்கு என்ன வேலை கொடுத்தார்களோ அதை தான் நான் செய்து கொண்டு இருந்தேன்.
எனது வேலை முடிந்தவுடன் நான் யாருடனும் அதிகமாக கூட பேச மாட்டேன் வீட்டிற்கு சென்றிடுவேன். எனக்கு கொடுத்த வேலையை நான் எனக்கு சுகயீனம் இல்லை என்றால் கூட நான் என்னுடைய வேலையை சரிவர செய்வேன் அது என்னுடைய கடமை.
ஆனால் நாம் வேலை செய்யும் இடத்தில் நம்முடைய சுயமரியாதைக்கு பக்கம் வரும்படி ஒரு விஷயம் நடந்தால் அந்த இடத்தில் ஒருபோதும் இருக்க கூடாது. இந்த சீசனில் எனக்கு அப்படிதான் நடந்தது. இந்த சீசன் முழுவதும் மற்றொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினார்.
இவர் தொகுப்பானியாக இருந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். ஆனால் இந்த சீசனில் அவர் தொகுப்பாளினி அல்ல. அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டியவர், ஆனால் அவர் அதை மறந்துவிட்டு என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் அவரின் ஆதிக்கத்தை அதிகமாக செலுத்தினார்.
எனக்கு ஒன்றும் தெரியாது நீ இப்படிதான் இருக்கணும் இப்படிதான் செய்ய வேண்டும். அப்படி சொல்வது எனக்கு பிடிக்கவில்லை. நான் தான் இங்கு பெரியவர் இங்கே நான் அதிகமாக வேலை செய்கிறேன் என்பதற்காக என்னால் அவருக்கு அடிபணிந்து நடக்க முடியாது.
எனக்கு என்னுடைய சுயமரியாதை தான் முக்கியம். இந்த சீசனில் என் உரிமைகளை கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. ஆனால் எனக்கு சரியானது எதுவோ அதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன், யாரை பற்றியும் நான் கவலைப்படமாட்டேன்.
புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் 'குக் வித் கோமாளி 5-ல் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன்."
என மணிமேகலை தெளிவாக கூறியுள்ளார். இதில் அவர் யார் காரணம் என்பதற்கான பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |