யூடியூபில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 5 இந்திய பாடல்கள்... ஒரு தமிழ் பாடலும் இருக்கா?
தற்காலத்தில் யூடியூபில் பொழுது போக்கும் பயனர்கள் ஏராளம். யூடியூபில் பல்வேறு வகையான பொழுது போக்கும் அம்சங்கள் காணப்பட்டாலும், பெரும்பாலானர்கள் பாடல் கேட்பத்தற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள்.
குறிப்பாக பாடல்களை கேட்பதற்கு என்றே பல ஆப்ஸ்கள் இருந்தாலும், யூடியூபில் பாடல் கேட்போரும், பாடல் காணொளிகளை பார்போரும் தான் அதிகம்.

அந்தவகையில், இந்தியாவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள பாடல்களின் தரவரிசையை இந்த பதிவில் பார்க்கலாம்.
top 5 இந்திய பாடல்கள்

யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ள இந்திய பாடல் என்ற இடத்தை குல்ஷன் குமார் பாடிய 'ஹனுமான் சாலிசா' பெற்றுள்ளது.டி-சீரிஸ் வெளியிட்ட இந்த வீடியோ 500 கோடி (5 பில்லியன்) பார்வைகளைப் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், இதன் புகழ் கொஞ்சமும் மங்காது இதுவரையில், எந்தப் பாடலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இரண்டாவது இடத்தைப் பஞ்சாபி பாடகி ஜாஸ் மனக்கின் 'லெஹங்கா' பாடல் பெற்றுள்ளது. இதுவரை 180 கோடி (1.8 பில்லியன்) பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் மஹிரா சர்மா நடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் பிரஞ்சல் தஹியா பாடிய '52 கஜ் கா தமன்' பாடல் உள்ளது. இந்தப் பாடல் இல்லாமல் உத்தராடி திருமணங்களில் எந்த சங்கீத் நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை என்றால் மிகையாகாது. 2020இல் வெளியான இந்தப் பாடல் 170 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த வரிசையில், த்வானி பானுஷாலி (Dhvani Bhanushali) பாடிய 'வாஸ்தே' பாடலும் யூடியூப்பில் சாதனைகளைப் படைத்துள்ளது. இது 160 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். நிகில் டி'சோசாவும் இதில் பாடியுள்ளார். இந்த பாடல் 4 ஆம் இடத்தில் உள்ளது.

அதில் இடம் பெற்ற தமிழ் பாடல் எது என்று தொரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றதா? அது தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்த 'மாரி 2' படத்தின் 'ரௌடி பேபி' பாடல் தான். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரியும். இந்த வீடியோ யூடியூப்பில் 160 கோடி (1.6 பில்லியன்) பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் நடனமும், அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. தற்போதும் இந்த பாடலை மக்கள் மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்து.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |