வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர்... உடலில் நடக்கும் மாயாஜாலம்!
பொதுவாவே நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பல மசாலா பொருட்களில் ஏறாளமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அப்படி உடல் எடை அதிகரிப்பு தொடக்கம் மலச்சிக்கல் வரையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் மசாலா பொருட்களில் ஒன்று தான் சீரகம்.

தினசரி காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்து வந்தால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
சீரகத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்ற தாது உப்புக்களும், நார்ச்சத்து, வைட்டமின் ஈ (Vitamin E), மற்றும் சில பி வைட்டமின்களும் செரிந்து காணப்படுகின்றது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதில் ஆற்றல் காட்டும்.

சீரக தண்ணீர் வளர்சிதை மாற்றத்துக்கும் வலுசேர்க்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், தொப்பையை குறைக்க போராடுபவர்களுக்கும் சீரக தண்ணீர் சிறந்த தெரிவாக இருக்கும்.
சீரக நீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதிலும் சிறப்பாக செயல்படுகின்றது. வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால், பித்தப்பைக்கும் பாதுகாப்பு அளிக்கும்.
கல்லீரலும் பலம் பெறும். மேலும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச்சத்து குறைப்பாட்டையும் நீக்கும்.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகையை குணப்படுத்தும்.
சளி பிரச்சனை, சுவாசக் குழாயில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கொடுக்கும்.
தொடர்ந்து இந்த சீரக தண்ணீரை குடித்து வருவதால் ஞாபக சக்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க செய்யலாம்.

சீரகத்தில் இருக்கும் அன்டி ஹைப்பர்டென்சிவ் தன்மை, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
செரிமானக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும், வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும், காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

உடலில் இருந்து நச்சுகளை நீக்கி, இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம், தோல் தொடர்பான பிரச்சனைககளுக்கு தீர்வு கொடுக்கும். சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |