மூக்கு குத்துவது அழகுக்காக மட்டுமா? மறைந்த ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க
தற்போது இந்தியாவிலுள்ள பெண்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள அழகிகளும் முக்கு குத்திக் கொள்கிறார்கள்.
இதற்கு சில அறிவியல் காரணங்கள் இருந்தாலும், சிலர் தன்னை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காகவும் முக்கு குத்திக் கொள்கிறாரகள்.
வழக்கமாக எமது முன்னோர்கள் கடைபிடிக்கும் பழக்கங்களில் ஏதாவது ஒரு அறிவியல் காரணம் இருக்கும். அதே போன்று பெண்கள் முக்கு குத்துவதற்கும் அறிவியல் காரணம் உள்ளது.
வெளிநாடுகளில் மூக்குத்தி குற்றிக் கொள்ளும் பெண்கள் அதனை ஒரு ஃபேஷனாகவே பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா போன்று தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பெண்கள் மூக்கு குத்திக் கொள்கிறார்கள் என்றால் அது அழகிற்காக மட்டுமல்லாமல் அது பாரம்பரியமாகவும் பார்க்கப்படுகிறது.
தங்க ஊசியை பயன்படுத்தி மூக்கை குற்றிக் கொண்டு, விதவிதமான டிசைன்களில் மூக்குத்தி அணிவது பழக்கமாக உள்ளது. அதற்கு ஒரு புராண கதையும் உள்ளது.
அந்த வகையில் பெண்கள் ஏன் மூக்கு குத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மூக்கு குத்துவதற்காக காரணம்
ராஜாக்கள் ஆட்சி காலத்தில் பெண்கள் பெரிய வளையம் போன்று மூக்கின் இரு பக்கத்திலும் மூக்குத்தி அணிவார்கள். இது மூளையின் பக்கத்தில் உள்ள ஹிப்போதெலமஸ் என்ற பகுதியின் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்துகிறது.
அத்துடன் மூளை செயல்படத் துணையாக இருக்கக்கூடிய பகுதிகளையும் சிறப்பாக செயற்பட வைக்கிறது. மூக்கு இடது பக்கம் குத்துவதால் சிந்தனை சக்தி ஒரு நிலைப்படுத்தப்பட்டு மன அமைதி கிடைக்கிறது.
தியானம், பிரார்த்தனை அதிகம் செய்பவர்களுக்கு இடது பக்கம் மூக்குத்தி குத்துவது உதவியாக இருக்கும். மேலும் மூக்குத்தி அணிவது நல்ல அதிர்ஷ்டத்தையும் அன்பையும் கொண்டு வந்து தருகிறது என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
இன்னும் சில பெண்கள் இடது நாசியில் துளையிட்டு மூக்குத்தி அணிவார்கள். இது இனப்பெருக்க தொகுதியுடன் தொடர்புடன் இருக்கும். ஆயுர்வேத சாஸ்திரங்களின்படி, மூக்கின் இடது பக்கத்தில் குத்தும் பொழுது கருப்பை மற்றும் இனப்பெருக்கத்தொகுதியுடன் தொடர்புடைய நரம்புகள் வலுவாக இருக்கும்.
அதே சமயம், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் வரும் மாதவிடாய் பிரச்சினைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பிரசவ வலியையும் குறைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |