வார்னே உயிரிழப்புக்கு உண்மையான காரணம் என்ன? வெளியான பகீர் தகவல்
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே(52)வின் இறப்பிற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷேன் வார்னே 1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டு விளங்கினார்.
இவர், சுழற்பந்து வீச்சாளராக தனது பயணத்தை தொடங்கி 1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி பின்பு கிரிக்கெட் உலகில் உச்சத்திற்கு சென்றார்.
இந்நிலையில் இவரது திடீர் இறப்பு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரடைப்பினால் உயிரிழந்த இவர் அதிக உடற்பயிற்சி செய்ததன் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் சமீப காலத்தில் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதே அவரே ஒரு டிவீட்டில் சமீபத்தில் சொல்லியிருந்தார். மேலும், தாய்லாந்தில் அவர் முகாமிட்டிருந்ததும் கூட எடைக் குறைப்பு முயற்சிக்காகவே என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வார்னே போட்டிருந்த ட்வீட்டில், "Operation shred" ஆரம்பித்து விட்டது. பத்து நாட்களாகி விட்டது. உடல் எடையைக் குறைக்கப் போகிறேன். ஜூலை மாதத்திற்குள் இந்தப் படத்தில் இருப்பது போன்ற பழைய தோற்றத்துக்கு மாறி விடுவேன் எனக் கூறியிருந்தார் வார்னே.
இந்நிலையில் அவர் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம், இவர் அதிகப்படியான உடற்பயிற்சி செய்ததுதான் என கூறப்பட்டது.
இந்நிலையில் வார்னே அதிகளவில் உடற்பயிற்சி செய்ததால் உயிரிழக்கவில்லை என்றும், அவரது கிரிக்கெட் ஆசான் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த துக்கத்தில் வார்னே அதிக அளவிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்துவை உட்கொண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டியதோடு, இவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.