தலையில் இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இனி தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தலையில்இரட்டை சுழியுள்ள குழந்தைகள் இருந்தால் அவர்கள் அதிகமான குழப்பம் செய்வார்கள் என பலரும் கூறி கேள்விபட்டிருப்போம்.
அத்துடன் இரண்டு சுழியுள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஒரு ஐதிகம் இருக்கின்றது.
இது தொடர்பில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டு சில விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பான்மையாக தலையில் இரட்டை சுழி இருக்காது. மாறாக நூற்றில் 5% நபர்களுக்கு தான் இப்படி இருக்கும்.
இரட்டை சுழி வர காரணம்
பொதுவாக குழந்தைகள் பிறக்கும் பொழுது அவர்களுக்கு இரட்டை சுழியிருந்தால் அது அவர்களின் பரம்பரையினரின் தாக்கம் என்று கூறலாம்.
நமது முன்னோர்களான தாத்தா, பாட்டியிற்கு இப்படி இருந்தால் அடுத்த தலைமுறை பிறக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இருக்கும். ஏனெனின் இது ஒரு மரபணு காரணமாக ஏற்படுகின்றது.
இரண்டு திருமணங்கள் ஏற்படுமா?
இரட்டை சுழியுள்ள ஆண்கள் இரண்டு திருமணம் செய்துக் கொள்வார்கள் என கிராமபுறங்களில் பேசுவார்கள். ஆனால் இதுவரையில் இது தொடர்பான எந்த சான்றுகளும் கிடைக்கப் பெறவில்லை.
சுழியை காரணமாக வைத்து ஆண்கள் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வது தான் உண்மை.
ஜோதிட விளக்கம்
இரட்டை சுழியுள்ள ஒரு குழந்தை நேரடியாக எதையும் பேசுபவர், பொறுமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் நிற்பவராக இருப்பார்கள். அத்துடன் இவர்களிடம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |