இரவு நேர தூக்கத்தை விட பகல் நேரத்தில் தூக்கம் வருகிறதா? காரணம் இதுதானாம்...!
தூக்கம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. ஒரு மனிதன் சராசரியாக 7 மணிநேரம் முதல் 8 மணி நேரம் வரையாவது உறங்க வேண்டும்.
அப்போது தான் உடல் நிலை சீராக இருக்கும். இதுமட்டுமின்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் தடுக்கவும் உதவுகிறது.
போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மூளை சரியாக இயங்காது. நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்திலேயே கழிகிறது.
ஒரு சிலர் இரவு 7 - 8 மணி நேரம் தூக்கத்திற்கு பின் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ நீண்ட இரவு தூக்கத்திற்கு பின்னரும் பகலில் தூங்க ஏங்குவார்கள்.
என்னதான் வேலைகள் இருந்தாலும் குட சில பகல் நேர தூக்கத்தை ரொம்பவே விரும்புவார்கள். இரவு தூக்கத்தில் பிரச்சனை இல்லாத போதும் பகலில் தூங்க வேண்டும் என்று தூங்குபவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட கூடும்.
பண சேமிக்க...வாழ்வில் முன்னேற வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்க...!
தூக்கம் வியாதியா?
அதிக தூக்கம் பிரச்சனைக்குரியது என்றும் அதிகம் தூங்குபவர்கள் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் ஏன் மரணத்திற்கு கூட ஆளாக நேரிடும். ஒரு சராசரி வயதுடைய பெரியவர்களுக்கு குறைந்தது 7 மணிநேரம் இடையூறு இல்லாத இரவு தூக்கம் தேவை.
இது படுக்கையில் செலவழித்த நேரத்தை அல்ல நிம்மதியாக தூங்கிய நேரத்தை குறிக்கிறது. மேலும், 7 மணிநேரம் நன்றாக தூங்கிய பிறகும் ஒருவர் சரியாக ஓய்வெடுக்கவில்லை என்பது போல உணர்ந்து, அடுத்த நாள் முழுவதும் தூங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், தாங்கள் தூக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக அவர்கள் உணர ஆரம்பிக்கலாம்.
இந்த அதீத அயர்ச்சியான்து கவலை, மனச்சோர்வு அல்லது சில மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றால் ஏற்படும் அடிப்படை பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.