பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா? தீயாய் பரவும் புகைப்படங்கள்
பிரபல டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுப்பவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 தற்போது வெகுசிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்றாவது நாளான இன்று சில சலசலப்புக்கு மத்தியில் முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் வலம் வருகிறது.
உண்மையான பிக்பாஸ்
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அதில் வரும் உரத்தக்குரல் யார் என்று தேடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி அவருடைய பெயர் சச்சிதானந்தம் என்றும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளார் என்றும் தகவல் கசிந்து வருகிறது.