ராசி இல்லை என ஒதுக்கப்பட்ட சிறுமி- Super Singer-ல் செய்த சாகசம்.. இமான் கூறிய அந்த வார்த்தை
இராணுவ வீரனின் மகள் Super Singer மேடையில் பாடிய அசத்தியதால் இமான் கூறிய சில வார்த்தைகள் அரங்கத்தையே புல்லரிக்க வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10
பிரபல தொலைக்காட்சியில் பிரமாண்டமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதில் திறமைக் கொண்ட சிறுவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களுக்கான குரல் தேடல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 நிகழ்ச்சியின் நடுவர்களாக டி. இமான், சித்திரம்மா, மனோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராசி இல்லை என ஒதுக்கப்பட்ட சிறுமிக்கு இமான் ஆதரவு
இந்த நிலையில், ராணுவ வீரரருக்கு மகளாக பிறந்த சிறுமியொருவர் தன்னுடைய இனிமையான குரலில் பாடி மற்றவர்களின் ஆதரவை சம்பாரித்துள்ளார்.
அதிலும், அவருடைய அப்பாவிற்கு பாடுவது என்றால் மிகவும் பிடிக்கும், அவர் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் எனக் கூறியதுடன் கண்கலங்கியுள்ளார். பிறந்த போது ராசி இல்லை என ஒதுக்கிப் பார்க்கப்பட்ட குழந்தை இன்றைய தினம் மேடையில் என்னை பெறுமைப்படுத்தியுள்ளது என அவருடைய அம்மாவும் கூறியுள்ளார்.
கண்ணீருடன் இருந்த குடும்பத்திற்கு இமான், “பலரால் ஒதுக்கப்பட்ட குழந்தை தான் இன்று உங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. உங்க குடும்பத்தின் அடையாளம் இவர் தான்..” என பாராட்டி பேசியுள்ளார்.
“இதுவே பெரிய விடயம்..” என நெட்டிசன்கள் தங்களின் ஆதரவையும் குறித்த குடும்பத்தினருக்கு வழங்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |