நிகழ்ச்சியை சாக்காக வைத்து எழிலுக்கு ப்ரோபோஸ் செய்யும் போட்டியாளர்! பக்கத்திலிருந்து கடுப்பான புகழ்.. பரபரப்பான ப்ரோமோ
நிகழ்ச்சியை சாக்காக வைத்து எழிலுக்கு ப்ரோபோஸ் செய்யும் போட்டியாளரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரெடி ஸ்டெடி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஸோக்களில் ஒன்று தான் “ரெடி ஸ்டெடி போ”.
வேடிக்கையான டாஸ்க்களுடன் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் விஷால் தொகுத்து வழங்குகிறார்.
அத்துடன் விஷால் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவரை விஷால் என அழைப்பதை விட எழில் என தான் அதிகமாக அழைக்கிறார்கள். மேலும் 'கலக்கப்போவது யாரு' ரக்சனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.
நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
இந்த நிகழ்ச்சி 3 சுற்றுக்களுடன் ஒன்றை மணி நேரம் ஒளிபரப்பாகும், தொடர்ந்து சுற்றுக்கும் இரு அணியிலிருந்து ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவார்.
இந்த நிலையில் விஷாலுக்கு போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது கவிதை எழுதி பிரபோஸ் செய்துள்ளார்.
இதனை பக்கத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த புகழ் வயிற்றெரிச்சலில் பொங்கியுள்ளார்.
அத்துடன் நிகழ்ச்சியை பார்த்த இணையவாசிகள் “நிகழ்ச்சியை சாக்காக வைத்து இந்த ப்ரோபோஸ் நடந்திருக்கலாம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |