மணிமேகலை குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறியது ஏன்? கோபத்தில் புகழ் கூறிய பதில்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகியது ஏன் என்று கோமாளியான புகழிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் கோபமாக அளித்த பதில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் கொமடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், நாய் சேகர் படத்தை இயக்கிய கிஷோர், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கோமாளிகளாக சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
வெளியேறிய மணிமேகலை
இதில் ஓட்டேரி சிவா, கிஷோர் போட்டியாளரிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது கோமாளியாக வலம்வந்த மணிமேகலை நிகழ்ச்சியினை விட்டு வெளியேறியுள்ளார்.
இவரது திடீர் முடிவிற்கு காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மணிமேகலை, ஷூட்டிங் டைம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையில், திரைப்படத்திலோ அல்லது அவரின் யூ டியூப் வேளைகளில் பிசியாக இருப்பதால் தான் வெளியேறியதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோமாளியாக இருக்கும் புகழிடம், கர்ப்பமாக இருப்பதால் மணிமேகலை விலகினாரா என்ற கேள்வி எழுப்பப்ட்டது. அதற்கு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது அவரது தனிப்பட்ட விஷயம்.
அதேபோல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறீர்கள், அதைப்பற்றி எனக்கு தெரியாது... அதேநேரம் தயவுசெய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடாதீர்கள்.
ஒரு வேலை மணிமேகலை கர்ப்பமாக இருந்தால் அது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அவர் தன்னுடைய தனிப்பட்ட விஷயத்திற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம்.. பட்டும் படாமல் கோபமாக பதிலளித்தார்.