ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளரின் தங்கை திடீர் மரணம் - நடந்தது என்ன? கண்ணீருடன் வெளியேறிய சம்பவம்!
ஐபிஎல் போட்டில்யில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவர் தான் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல்.
அமெரிக்காவில் குடிபெயர்ந்த இவரது குடும்பம் விக்ரம் படேல் மற்றும் தர்ஷனா படேல் தான் தாய் தந்தை. கிரிக்கெட் வீரராக ஆவதற்காக ஹர்ஷல் இந்தியாவில் தங்கியிருந்தார்.
ஹர்ஷலிற்கு மொத்தம் மூன்று உடன்பிறந்தவர்கள், ஹர்ஷல் படேல், தபன் படேல் மற்றும் அர்ச்சிதா படேல், அர்ச்சிதா படேல் இளைய சகோதரி ஆவார்.
ஹரியானாவைச் சேர்ந்த ஹர்ஷல் படேல் 2021 சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்து சாதனைகளையும் முறியடித்தவர்.

தளபதி விஜய் 10 வருடமாக பேட்டி கொடுக்காததற்கு காரணம் என்ன தெரியுமா?
தங்கை இறந்தது எப்படி?
இவர், அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த போது அவரது சகோதரி அர்ச்சிதா படேல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கை நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் உயிரிழந்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
அவரின் மறைவுக்கான உண்மை காரணத்தையும் அவரது குடும்பத்தினர்கள் தெரிவிக்க வில்லை.
ஹர்ஷல் படேலுக்கு இந்த செய்தி போட்டி முடிந்த பின் தான் தெரிய வந்தது.
இதன்பின்னர், குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்தைப் பற்றி அறிந்ததும் ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார்.
மேலும், ஏப்ரல் 12 ஆம் தேதி சிஎஸ்கேக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.